2-வது ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்!

2-வது ஒருநாள் போட்டியில் 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனிடையே, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த செப்.27-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா, குல்தீப், குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.