முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

’அது பொய்யாம்ல..’ -நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா 2வது அலை இந்தியாவில் கொடூரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்களுக்கு அச்சமூட்டும் பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவரும், வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவருமான லூக் மோன்டாக்னீர் பெயரில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

அதற்கு ஆதாரமாக லூக் தொலைக்காட்சி பேட்டியின் ஒரு பதிவையும் அவர்கள் இணைத்துள்ளனர். ஆனால் அந்த வீடியோவில் லூக் பொதுவான கேள்வியையே முன் வைக்கிறார். பெருந்தொற்று ஓயாத நிலையில் தடுப்பூசி போடுவது சரியா? என்றும் அதுபற்றி சர்வதேச நோயியல் ஆராய்ச்சியாளர்கள் ஏன் அமைதி காக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நோய்த்தொற்று பரவிக்கொண்டே இருக்கும் சூழலில், தடுப்பூசி போடும் போது, வைரஸ் தொற்றானது வேறு வேறு வடிவத்தில் உருமாற்றம் அடையும் என்றே பிரஞ்ச் மொழியில் அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

வைரஸ் தொற்று குறித்த ஆராய்ச்சியாளரான லூக் மோக்டாக்னீர், எச்.ஐ.வி. வைரசைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்.
………..

Advertisement:
SHARE

Related posts

50% போலியாமே! சானிடைசர்களில் இதை கவனிக்கிறீங்களா?

Gayathri Venkatesan

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

Niruban Chakkaaravarthi

தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

Halley karthi