முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து:முதல்வர்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்ப பெற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உள்பட 13 அரசியல் தலைவர்கள் மீது, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி போட்டுக்கொள்ள இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு!

Gayathri Venkatesan

இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட்

Saravana Kumar

பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Saravana