திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பணிகள் குளிப்பதற்கு தடை போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் வன விலங்கு கணக்கெடுப்பு நடை பெற்றது. இதனால், சுற்றுலா வரும் பயணிகள் அருவியில் குளிப்பதற்கும் காரையார் அணை மற்றும் சேர்வலாறு பகுதிகளுக்கும் சுற்றுலா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கணக்கெடுப்பு பணி கடந்த செல தினங்களுக்கு முன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, இன்று முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
எனவே, இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும், கோடை காலம் நெருங்கி வருவதாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் சிறு குறு தொழிலாளர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ம. ஸ்ரீ மரகதம்







