மகளிர் பிரீமியர் லீக் – பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்…

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று மும்பையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த கிரிக்கெட் தொடரின் 2-வது நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

முதலாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். மெக் லேனிங் 43 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் அடித்தனர்.

அண்மைச் செய்தி :திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கேகர்பாபு

அதன்பிறகு, பெங்களூரு அணி 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் ஸ்ம்ருதி மந்தானாவும் ஷோபி டெவினும் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர். ஸ்ம்ருதி மந்தானா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். இவரைத்தவிர மெகன் ஸ்கட்  30 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்தது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.