சீலா மீன்களின் வரத்து அதிகரிப்பு – மீனவர்கள் மகிழ்ச்சி

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சீலா மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால்  மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில், 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படகின் மூலமாக ஆழ்கடலில்…

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சீலா மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால்  மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில்,
500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படகின் மூலமாக ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகப்படியான நாட்டுப் படகுகள் கரை திரும்பி உள்ளது. இதையடுத்து ஏற்றுமதி ரகம் வாய்ந்த சீலா மீன்கள் அதிகம் காணப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாறை, ஊழி, மற்றும் ஐலேஷ் போன்ற மீன்களின் வரத்து அதிகமாக கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீலா மீன்கள் கிலோ 700 முதல் 800 வரையும்,  அயிலேஷ் மீன்கள் ஒரு கிலோ 180 முதல் 250 வரையும், பாறை மீன்கள் ஒரு கிலோ 300 ரூபாய் வரையிலும், மற்றும் ஊழி மீன்கள் கிலோ 400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மீனவர் தெரிவித்துள்ளனர்.

 மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும், மீன்கள் நல்ல விலைக்கு விற்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

-கோ. சிவசங்கரன்.



சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.