மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

ரூ.6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, …

ரூ.6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  அவர்களது உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயல்,  கனமழை,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  4 மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாய விலை கடை மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன்களை பெற்று சென்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீடு போதாது எனவும் ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி கொட்டும் மழையில் பேரணியாக சென்று விவசாயிகள் கோட்டாசியரிடம் மனு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.