மிகக் குறைந்த வயதில் ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ள பெருமையை பெற்றுள்ளார் இங்கிலாந்து வீரர் ரேஹான் அஹமது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்றது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் தரப்பில் அறிமுக வீரரான ரெஹான் அஹ்மத் 5 விக்கெட்களையும் ஜேக் லீச் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். ரேஹான் அஹமது கலந்து முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் இது. அவருக்கு வயது வெறுமனே 18 வயது 126 நாட்களேயாகும். ரெஹான் தனது முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது அறிமுகத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் .
இதனையும் படியுங்கள்: மகளிர் பிரீமியர் லீக்; No Ball, Wide-க்கு டிஆர்எஸ் முறை
இதற்கு முன்னதாக கடந்த 2011 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் தற்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் 18 வயது 193 நாட்களில் 79 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். தற்போது 2022ல் பேட் கம்மின்ஸின் சாதனையை ரெஹான் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் ரேஹான் அஹமதுவின் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களைடையே பரவலாக பேசப்பட்டது.
இதனையும் படியுங்கள் : ஹேலி மேத்யூஸ் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே சர்வதேச ஒருநாள் போட்டிகளில், மிகவும் குறைந்த வயதில் இடம் பிடித்து விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை ரேஹன் அஹமது பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற வங்க தேசத்துடனான ஒரு நாள் போட்டியில் ரேஹான் அஹமது இடம்பெற்றார்.
ரேஹன் அஹமதுக்கு 18 வயது 205 நாட்களாகும். ரேஹனுக்கு முன்னதாக பென் ஹோலியோக் என்பவர் 19 வயது 195 நாட்களில் இங்கிலாந்து அணிக்காக முதல் போட்டியில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மிகக் குறைந்த வயதில் விளையாடிய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் ரேஹான் அஹமது.
– யாழன்







