முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஹேலி மேத்யூஸ் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹேலி மேத்யூஸ் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய
ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ மற்றும்  பெங்களூர் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவர்பிளே
ஓவர்களிலேயே பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களை விக்கெட்களை இழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவானது. 18.4 ஓவர்களின் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர் அணி.

இதனையும் படியுங்கள்: மகளிர் பிரீமியர் லீக்; NoBall, Wide-க்கு டிஆர்எஸ் முறை

சிறப்பாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 156 ரன்கள் என்ற
இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஹேலி மேத்யூஸின் 77 ரன்கள்
மற்றும் நேட் சைவர் – இன் 55 ரன்கள் உதவியுடன் 14.2 ஓவர்களிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடி 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழி வகுத்த ஹேலி மேத்யூஸ் சிறந்த
ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் விளையாடிய இரண்டு
போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் தொடர்கிறது மும்பை இந்தியன்ஸ்
அணி!

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஸ்போர்ட்டுக்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

Web Editor

நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்!

Halley Karthik