முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!

தமிழக அரசின் உத்தரவின் பேரில் 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி பேரறிவாளன் 30 நாட்கள் சாதாரண விடுப்பில் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement:

Related posts

டி.எம்.காளியண்ணன் மறைவு: கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் இரங்கல்!

Karthick

60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

Gayathri Venkatesan

பிரதமரின் வருகயை முன்னிட்டு நாளை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

Karthick