’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…

தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு பயணத்தை இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார். இத்தொடக்க விழாவில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பல பாமக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து இடங்களிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் இந்த பயணம், சென்னையில் தொடங்கி மதுரையில் நிறைவடைய உள்ளது. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படியுங்கள் : நியூஸ்7 தமிழின் ’நெரிசலில் நெளியும் சென்னை’ களஆய்வு எதிரொலி – மெட்ரோ 2ம் கட்ட திட்ட இயக்குனர் அர்ஜுனன் விளக்கம்

தமிழைத் தேடி பயண தொடக்க விழாவில் பேசிய ராமதாஸ்,  தமிழ்நாட்டின், பள்ளிக் கூடங்கள், ஆலயங்கள், உயர்நீதிமன்றம், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள், என எங்கும் தமிழ் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தாய்க்கும் குழந்தைக்குமான உரையாடல்களில் கூட தமிழ் இல்லை என்று வேதனை தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,  ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை தான் மேற்கொள்வதாக தெரிவித்த அவர், தமிழை பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்களில் எங்காவது பார்த்தேன் என யாராவது கூறினால், அந்த நபருக்கு 5 கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறினார்.

மேலும் தமிழ் இருக்கிறது என யாராலும் சொல்ல முடியாது என்றும், அப்படி சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம் என்றும் கூறிய அவர், தமிழை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்த முழு வீடியோவைக் காண : 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.