#IPL 2026 | சென்னை அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 59-வது லீக் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் போடப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 5-வது இடத்திலும், லக்னோ அணி 10-வது இடத்திலும் நீடிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.