’நெரிசலில் நெளியும் சென்னை’ என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் மெகா கள ஆய்வு நடத்தி வரும் நிலையில், மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்தி வருகிறது.
இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – கொளத்தூர் பகுதி கள நிலவரம்
சென்னையின் முக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளால், போக்குவரத்துச் சிக்கல்கள் ஏற்படுவதையும், வாகன ஓட்டிகள் இதனால் அவதிக்குள்ளாவதையும் இந்த கள ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் பொதுமக்கள் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், போக்குவரத்தை சீர்ப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நியூஸ்7 தமிழுக்கு தொலைப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்த, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் இயக்குநர் அர்ஜுனன், மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் சாலைகளை மேம்படுத்தும் பணியில் இனி முழுவீச்சில் ஈடுபடவுள்ளதாக கூறினார்.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைகளை தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டே இருப்பதாக கூறிய அவர், ஆற்காடு சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு மிக விரைவில் சாலையை சீரமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்புகளைக் குறைத்து சாலையின் நீளத்தை அகலப்படுத்தி வருவதாக கூறிய அவர், ஆற்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக மெட்ரோ பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :