சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

ராமநாதபுரத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைத்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். ராமநாதபுரத்தில் வேலு மாணிக்கம் குரூப் ஆப் கம்பெனி, சாலை மற்றும் கட்டடம்…

ராமநாதபுரத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைத்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

ராமநாதபுரத்தில் வேலு மாணிக்கம் குரூப் ஆப் கம்பெனி, சாலை மற்றும் கட்டடம் உள்ளிட்டவற்றை ஒப்பந்ததாரராக பணிகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்நிறுவனம் வருமான வரித்துறையினருக்கு வரி ஏய்ப்பு செய்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர்கொண்ட குழு, வேலு மாணிக்கம் குரூப் ஆப் நிறுவனம், அந்நிறுவனம் உரிமையாளர் இல்லம் மற்றும் உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டது.

நேற்று முதல் இரவு பகலென விடிய விடிய 8 மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இதில் தங்க காசுகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாலை அமைக்கும் பணி, கட்டட பணிகளில் டெண்டர் எடுத்து வேலைசெய்து வரக்கூடிய நிறுவனமாக இது இருக்கிறது. சமீபகாலமாக இந்நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் ராமநாதபுரம் நான்குவழிச் சாலையில் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.