சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது.
பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இன்று மாலை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே. நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள், மழை காரணமாக சிரமங்களை மேற்கொண்டனர். இருந்தாலும் வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







