தொகுதி மறுசீரமைப்பு இந்தியாவிற்கு பேராபத்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு…!

இந்தியாவுக்கு தொகுதி மறுசீரமைப்பு என்னும் பேராபத்து வந்துள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டிற்கு துரோகம் பண்ணும் கூட்டத்தை விரட்ட வேண்டும் என கேட்டு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் துரோகத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். தருமபுரி என்றாலே மறக்க முடியாத ஊர். பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண் இது‌‌.

இந்தியாவுக்கு பேராபத்து ஒன்று வந்துள்ளது‌. பசி, பட்டினியை கருதி, மக்கள் தொகையை கட்டுப்படுத்தினோம். ஆனால் இப்போது எம்.பி. தொகுதியின் எண்ணிக்கை குறைய போகிறது. சொந்த நாடே தன் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்போகிறது. அதுதான் தொகுதி மறுசீரமைப்பு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லிக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட வேண்டும். தேர்தல் முக்கியமல்ல, நம் உரிமை தான்‌ முக்கியம். நாம் அடிக்கிற அடியில் டெல்லி அடங்கனும். எடப்பாடி பழனிச்சாமி இந்த தமிழ்நாட்டின் உரிமையிலாவது, சுய நலமாக இருக்கலாமே.

சூப்பர் ஸ்டார் யாரென்று கேட்டால் இன்றைக்கு, சின்ன குழந்தையும் சொல்லும் திமுக தேர்தல் அறிக்கை என்று. மகளிருக்கு கிடைக்கும் ரூ. 8000 கூப்பனில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொள்ளலாம். உங்கள் அண்ணன் ஸ்டாலின் தருகிறேன்.

தெற்கு தேயும் என்று நினைக்கிறார்கள். நான் சண்டை செய்ய நான் ரெடி, சப்போட்டுக்கு வருவீங்களா? இப்போது டி20 மேட் நடக்கிறது. முதல் 15 ஓவர்களில் அடித்து ஆடினால் தான் 200 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.