புதுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தின் 308வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற, தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி, உழவர்கரை பகுதியில் உள்ள மிகவும் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை பேராலயத்தின் 308வது ஆண்டு விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்றதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வில்லியனூர் பங்குத் தந்தை பிச்சை முத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையை வழிபட்டனர்.
—–ரூபி.காமராஜ்.







