பஞ்சாபில் ரூ. 20,000 கோடி இழப்பு – பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கடும் மழையால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. இதனால் முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு சிப்பாக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தியா அவர்களுடன் நிற்கிறது என்பதை நாம் உறுதியளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு நாம் ஒன்றிணைந்து அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.