முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி மாணவன் கோவாவில் மர்ம மரணம்

கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சில நாட்களாக அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்றும் அவர் இரவு நேர விருந்தில் கலந்து கொண்டு அதிக அளவு போதை பொருள் உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கேயே மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை மீட்டு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேல் சிகிச்சைகாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்: போதை மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் போலீசாரிடம் தெரிவித்துள்ளது. உடற்கூறாய்வு முடிவு வெளிவந்த பிறகே இதன் உண்மையான  தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா; டோலோ விற்பனை இத்தனை கோடியா?

G SaravanaKumar

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

EZHILARASAN D

முகநூலில் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி?

G SaravanaKumar