தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து இருப்பதாலும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு துறை மூலமாக லைபாய் எனும் தற்காப்பு தண்ணீரில் மிதக்கக்கூடிய லைபாய் அமைக்கும் பணியை தீயணைப்பு துறையினர் அமைத்துள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்காசி மாவட்டம், குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியான சம்பவம் அருவி பகுதியில் உள்ள தடாகத்தில் தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லைபாய் அமைக்கும் பணி தீயணைப்புத் துறையினர் அமைத்துள்ளனர்.
எவ்வளவு வெள்ளம் வந்தாலும் சுற்றுலா பயணிகள் தடாகத்தில் விழுந்தாலோ வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாலோ அதைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பித்துக் கொள்ளலாம். 15க்கும் மேற்பட்ட லைபாய் அமைக்கும் பணியை தீயணைப்புத் துறையினர் அருவி பகுதியில் அமைத்துள்ளனர். தீயணைப்புத் துறை இந்த முயற்சியால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.