முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277
வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் திமுக மாநில சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு,
அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா, பா.ஜ.க வின் கராத்தே தியாகராஜன், உள்ளிட்ட
பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சென்னை மாவட்ட
கூடுதல் தேர்தல் அதிகாரி பிரசாந்த் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277
வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 512 பேரும், பெண் வாக்காளர்கள்
19 லட்சத்து 71 ஆயிரத்து 653 பேரும், இதர வாக்காளர்கள் ஆயிரத்து 112 பேரும்
உள்ளனர்.

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும் போது இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் இரண்டையும்
ஒப்பிடும் போது சென்னையில் 10 ஆயிரத்து 180 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
இதன் மூலம் சதவீத அடிப்படையில் 0.26 % எண்ணிக்கை குறைந்துள்ளது.

தொகுதிகளின் அடிப்படையில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 70
ஆயிரத்து 125 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 7
ஆயிரத்து 831 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் , பட்டியலில் பெயர்
சேர்க்க 57 ஆயிரத்து 437 வாக்காளர்கள் விண்ணப்பித்ததாகவும், அதில் 54 ஆயிரத்து
347 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து
தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து உரிய நடைமுறையை பின்பற்றி
இறந்து போனவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், பல முறை பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஆகிய பெயர்கள் கண்டறியப்பட்டதில், 64 ஆயிரத்து 527 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் வெளியிட்டப்பின், திமுக,  அதிமுக, பா.ஜ.க கட்சிகளின் நிர்வாகிகள்
பெயர் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், தொகுதிகளின் பரப்பளவை பொறுத்து வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரிணாமூல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர் விலகல்

Mohan Dass

பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள்

Web Editor

மக்களே சாப்பிட தயாராகுங்கள் – நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா

Dinesh A