‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ பெயர் மாற்றம்! – அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் பெயர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் மாணவர்கள் பசியின்றி பயில ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாண்வர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் மாணர்களுக்கு காலை நேரங்களில் உப்புமா, கிச்சடி, பொங்கல் மற்றும் கேசரி போன்ற ஆரோக்கியமான உணவுகள் வாரத்தின் 5 நாட்களுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு காலை உணவுத்திட்டம் 8-அம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.