விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் கொல்கத்தாவில் தொடங்கியது. அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது. விஜய் சேதுபதியுடன் சாய் பல்லவி நடந்து வரும் அக்காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்படத்திற்கு, இஞ்சி வெல்லம் எனப் பெயரிட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.