“வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் ராஜீவ்!

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜீவ் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “சுற்றுச்சூழல் துறை என்பது நாளைய மக்களை பாதுகாக்கும் துறை. நிலையான வளர்ச்சி பாதையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு நிர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 60,981 தொழிற்சாலைகள் தமிழ்நாடு முழுதும் செயல்பாட்டில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் இருக்கக் கூடாது. கண்ணியத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களை நடத்திய ஒருவர் தான் முதலமைச்சர். மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு அரசு எந்த ஒரு சமரசமும் செய்யாது. வளர்ச்சி வேண்டும் ஆனால் மாசு இல்லாமல் வளர்ச்சி வேண்டும்.

தொழில் வளர்ச்சி இயற்கை வளங்களை பாதிக்காமல் வகையில் அமைய வேண்டும். தமிழின் தொன்மையான வரலாறு இயற்கையோடு வாழ்வதுதான். இயற்கை வளங்களை பாதுகாத்து வாழ்விடங்களை உருவாக்குவது கடமையாகும். குழந்தைகளுடையே சுற்றுச்சூழல் பண்பை வளர்க்க பசுமை பாடம் மேம்படுத்தப்படும். சுற்றுச்சூழல் துறைக்கு தன்னார்வலர்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனிவரும் காலங்களில் மாதம் ஒரு நாள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தினை எங்கள் துறை சார்பாக சுத்தம் செய்ய உள்ளோம். மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பு கவசங்கள் அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கொடுக்கப்படும். 24 ஆயிரம் வண்டி ஒரு நாளைக்கு கோயம்பேடு காய்கறிக்கு செல்கிறது. இந்த வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.