குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய பிரதமர் நரேந்திர மோடி – வைரலாகும் பதிவு!

“என் இளம் நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி இன்று…

“என் இளம் நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அலுவலகத்தில் தம்மைச் சந்திக்க வந்த சில குழந்தைகளுடன் விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “என் இளம் நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்கள்” என தலைப்பிட்டு தனது சமூக ஊடக பக்கங்களில் அந்த வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

ஆனால், அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது. அக்குழந்தைகள் யார் என்ற தகவல் அதில் பதிவிடப்படவில்லை. இருப்பினும், ஜார்கண்ட் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பேரக் குழந்தைகளுடன் விளையாடிய வீடியோதான் அது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில் இருக்கு சிறுமி, சிறுவனின் காதுகளை இழுத்து அவர்களுடன் விளையாடும் பிரதமர் மோடி, பின்னர் அவர்களுக்கு நாணயத்தை வைத்து மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர். இந்த பதிவை பாஜக இந்தியா ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/BJP4India/status/1725007834402938916?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1725007834402938916%7Ctwgr%5Ea5b63aa8ddd8d9d700ae9d6bbd2627f0e77e37a9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FBJP4India%2Fstatus%2F1725007834402938916%3Fref_src%3Dtwsrc5Etfw

முன்னதாக, 2018-ம் ஆண்டில் இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மகளது காதுகளை இழுத்து பிரதமர் மோடி விளையாடி காட்சிகள் வெளியாகின. இதேபோல், 2016-ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மகனது காதுகளையும், 2014-ம் ஆண்டில் ஜப்பான் சென்ற போது அங்கு ஒரு சிறுவனது காதுகளையும் பிடித்து இழுந்து பிரதமர் மோடி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.