முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காத்தவர் பிரதமர் மோடி” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேச்சு!

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் உயிரை காத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். 
மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேசியதாவது:
தமிழர்கள் நலனிலும் மீனவர்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் உயிரை காத்தவர் பிரதமர் மோடி.  மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே அரசு பாஜக அரசு.  பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடைபெறவில்லை.
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேசினார். 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தவறான பொருளாதார கொள்கையால் மக்களை வாட்டி வதைப்பதா? மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்

Halley Karthik

லியோ பட சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி முறையீடு; அவசர வழக்காக விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

Web Editor

நடிகர் விக்ரம் உடல்நிலைக் குறித்து மருத்துவமனை விளக்கம்

Vel Prasanth

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading