கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும்,  பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது…

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும்,  பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,  சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

“சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என் வீட்டிற்கு வந்தார்.  சில பிரச்சனை எனக்கூறி அழுது கொண்டிருந்தார்.  நான் என்ன விஷயம் என்று அப்பெண்ணிடம் கேட்டேன்.  இது தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை,  அழைத்து அப்பெண்ணுக்கு உதவுமாறு கூறினேன்.  மேலும் அவர்களுக்கு நிதி உதவி செய்தேன். ஆனால்,  இப்போது அவர் எனக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார்.

அவளுக்கு மனநலம்  சரியில்லை என நினைக்கிறேன்.  சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.  ஒருவருக்கு உதவி செய்தால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. கொஞ்சம் பணம் கூட கொடுத்திருந்தேன். இதெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக செய்யக்கூடியது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தன் தாயாருடன் 17 வயது சிறுமி எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாகவும்,  அப்போது தனக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சிறுமி புகாரில் கூறியுள்ளார்.  தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  இதை வெளியில் கூற வேண்டாம்.  உனக்கு தேவையான உதவிகளை செய்கிறேன்.  இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.