ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வெஸ்ட் இண்டிஸில் 14வது ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (29-01-2022) நடைபெற்ற கால் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் வங்க தேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்க தேச அணியின் மஹ்பிஜுல் இஸ்லாம், இப்தாகர் ஹொசைன் களமிறங்கினர். வந்த வேகத்திலே இருவரும் முறையே 2 மற்றும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அவர்களை அடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், 37.1 ஓவரில் 111க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் அதிகபட்சமாக மெஹ்ரோப் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிக்குமார் 3 விக்கெட்டுகளையும், விக்கி ஓஸ்ட்வால் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்கள் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.