வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அகரம், நரசிங்கபுரம், சின்னமடம், பரசுரெட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் சின்னமடம், நரசிங்கபுரம் பகுதியில் பெருமாள், வெங்கடபதி, ராமதாஸ் ஆகியோருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்தது. இதனால் பண்ணையில் இருந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதனால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள், அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.