மழை நீர் தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தேங்காமல் இருக்க என்ன தீர்வு?” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது. இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வு எதிரொலியாக அமைச்சர் சேகர்பாபு சென்னை கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வு குறித்து, அவர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நியூஸ்7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – கொளத்தூர் பகுதியில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு
இடம்: கொளத்தூர்#VoiceofPeopleWithNews7Tamil | @mkstalin | @CMOTamilnadu | @PKSekarbabu | @chennaicorp pic.twitter.com/WtRH58t6gd
— News7 Tamil (@news7tamil) November 21, 2021
மழை பெய்த நாளில் இருந்து முதலமைச்சர் கள ஆய்வில் இருக்கிறார். வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய டெக்னிக்கல் கமிட்டியை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற அதிகாரி திருப்பதி தலைமையில், மழை நீர் பாதிப்பில் இருந்து சென்னையை மீட்க, முழுமையான வரைவு திட்டத்தை தயார்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
கூடிய விரைவில் அந்த திட்டம் தயாரானவுடன், நிதியை பற்றி கவலைப்படாமல், கடந்த ஆட்சியில் வைத்திருக்கிற நிதி சுமையையும் எதிர்கொண்டு, கடந்த ஆட்சியின்போது கொள்ளையடிப்பதற்காக போட்ட திட்டங்களை உதறிவிட்டு, அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், அந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனி ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்க அரசு கவனமுடன் இருக்கும். கடந்த அதிமுக ஆட்சி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சென்னை மக்களுக்கு ஒரு விடியல் தரவில்லை.
இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.