பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 8 மாத ஆட்சி காலத்தில், திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தேர்தலின் மூலம் அதிமுகவின் வலிமையை நிலைநாட்டிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அண்மைச் செய்தி: உத்தரப்பிரதேச தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
அதிமுக பிரமுகர்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு போடமுயற்சி செய்வதாக கூறிய அவர், அம்மா உணவகங்களை மூட முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். தரமில்லாத பொங்கல் பரிசு பொருட்களை மக்களுக்கு திமுக அரசு வழங்கியதாகவும், இதற்கான பொருட்களை கொள்முதல் செய்ததில் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக ஆத்தூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் பரப்புரை மேற்கொண்டார், தமிழ்நாட்டில் திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும்,சேலம் மாவட்டத்தில் அதிமுக தான் ஆளுங்கட்சியாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








