நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், மற்ற மாநிலங்களில் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுக போன்று பாஜகவிற்கு திமுக அடிமை இல்லை எனவும், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார். அதேபோல, இதற்கு முன்பு வேறு ஒரு நிகழ்ச்சியில், திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது என ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
கடலூர் மேற்கு மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் & புதுப்பேட்டை பேரூராட்சிகளில் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் & கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்கு சேகரித்தேன். சிறப்பான வரவேற்பை வழங்கிய பொதுமக்கள்- கழகத்தினருக்கு நன்றி. @cvganesan1 pic.twitter.com/0TNa1FvuMk
— Udhay (@Udhaystalin) February 10, 2022
ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல, எனவும் தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என கூறினார்.
இது ஸ்டாலின் அரசு அல்ல என்றும், தமிழ்நாட்டு மக்களின் அரசு எனக் கூறிய அவர், நவீன தமிழகத்தை உருவாக்க பாடுபடும் பொற்கால ஆட்சி திமுகவுடையது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
#உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி #Cuddalore @MRKPanneer @cvganesan1 pic.twitter.com/140HPdvHiw
— Udhay (@Udhaystalin) February 10, 2022
பாஜகவிடம் அதிமுக பதுங்கியதால் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது என்று கூற ஓபிஎஸ், இபிஎஸ் தயாரா? என அவர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








