ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.…

ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்காமல், காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் விமர்சனம் செய்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆளுங்கட்சியினர் முறையாக பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். மேலும், அதிமுக சார்பில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: தோசை சுடும் சவாலை எதிர்கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அதிமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் தீபா சீயாளம், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 83-வது வார்டில் போட்டியிடுகிறார். அவர், தனது வார்டுக்குப்பட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அனைவரிடமும் துண்டறிக்கைகளை விநியோகம் செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தீபா சீயாளத்திற்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.