உத்தரப்பிரதேசத்தில் இன்று நடந்த சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
அதிகப்படியான தொகுதிகளையும், வாக்களர்களையும் கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநில தேர்தல் வாக்குப்பதிவானது 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
அந்த வகையில் 7 கட்ட வாக்குப் பதிவில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் மட்டும் மொத்தமாக 623 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் காலை தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவு, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. நடந்து முடிந்த இந்த வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 60.50% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் அடுத்த கட்ட தேர்தலானது பிப் 14ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







