#RahulGandhi குறித்து சர்ச்சை பதிவு…ஒடிசா நடிகர் மீது புகார்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் கொலைக்கு,…

police,complaint , Odisha actor ,Buddhaditya Mohanty ,controversial post ,Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் கொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல ‘கேங்ஸ்டர்’ லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து அக்கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து ஒடிஷா நடிகர் புத்ததித்யா மொகந்தி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்ததாவது:

“பாபா சித்திக் கொல்லப்பட்ட பிறகு, கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியாக இருக்க வேண்டும்” என்று ஒடிஷா நடிகர் புத்ததித்யா மொகந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படியுங்கள் : Maharaja திரைப்படம் குறித்து நடிகர் விஜய் கூறியது என்ன? இயக்குநர் நித்திலன் வெளியிட்ட அப்டேட்!

இதையடுத்து, நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி மாநில NSUI தலைவர் உதித் பிரதான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, மொகந்தி சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை தன்னுடைய வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.