#YOLO | #Kanguva திரைப்படத்தின் 2-வது பாடல் – Promo இணையத்தில் வைரல்!

கங்குவா படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்…

#YOLO | #Kanguva Movie 2nd Song – Promo Goes Viral On The Internet!

கங்குவா படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவ. 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக். 26-ம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் இன்று (அக். 21) வெளியாகவுள்ளது என படக்குழு நேற்று புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து, இன்று ப்ரோமோஷனுக்காக மும்பை சென்ற சூர்யா தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு கல்லூரி மாணவர்களை அவர் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, கங்குவா படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.