#SIR படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியீடு!

நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம்…

The crew has released the first 6 minutes of the movie 'Sar' starring actor Vimal.

நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு ‘கன்னி மாடம்’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்போது இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் ‘சார்’ திரைப்படத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : Maharaja திரைப்படம் குறித்து நடிகர் விஜய் கூறியது என்ன? இயக்குநர் நித்திலன் வெளியிட்ட அப்டேட்!

‘சார்’ திரைப்படம் கடந்த 18ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி, சீமான் அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.

கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமம்மான ஒன்று என அழுத்தி கூறியிருக்கும் திரைப்படம் ‘சார்’. இந்நிலையில் ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிடங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.