AI-யை விட சோறு தான் முக்கியம்! – ChatGPT-யைத் தூக்கி சாப்பிட்ட இந்தியன் ஆயில் ஆப்!

Google Play Store-இன் இலவச செயலிகளின் தரவரிசைப் பட்டியலில் ChatGPT-யை பின்னுக்கு தள்ளி இந்திய ஒன் ஆயில் செயலி முதல் இடத்தை பெற்றுள்ளது.

எலக்டரானிக் உலகமான இன்று அனைத்து வேலைகளையும் செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தியாவில் Google Play Store-இன் இலவச செயலிகளின் தரவரிசைப் பட்டியலில் OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) செயலியான ChatGPT-யே முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் ChatGPT தனது முதல் இடத்தை இழந்துள்ளது.

நீங்கள் நினைப்பது போல ChatGPT- யை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது Gemini-யோ அல்லது Perplexity-யோ அல்ல. ஒரு இந்திய செயலியே இதற்கு காரணம். ஆமாம் IndianOil ONE செயலில் தான் அது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்ய உதவுகிறது.

என்ன காரணம்……?

மேற்காசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை கொண்டுவரும் ஏராளமான சரக்கு கப்பல்கள் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. இதன் காரணமாக உணவகங்கள் மற்றும் விடுதிகள் அதிக கேஸ் பிடிக்கும் உணவுகளை மெனுக்களில் இருந்து தவிர்க்க ஆரம்பித்தன.

 

தொடர்ந்து அச்சம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் தொலைபேசி அழைப்புகள் அல்லது IVRS மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை நின்று போனது. இதன் விளைவாக IndianOil ONE செயலியை அதிகளவு பதிவிறக்கும் செய்யவும் பயன்படுத்தவும் மக்கள் ஆரம்பித்தனர்.

புள்ளி விவரங்கள் சொல்வதென்ன…?

Play Store-ல் உள்ள தரவுகளின்படி, IndianOil ONE 4.4 மதிப்பீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ChatGPT தற்போது 4.6 மதிப்பீட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் ஃப்ரீரீல்ஸ் மூன்றாவது இடத்திலும், மீஷோ நான்காவது இடத்திலும், ஸ்டோரி டிவி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Flipkart,PhonePe, Instagram மற்றும் myntra ஆகியவையும் முதல் பத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

AI-யை விட சோறு தான் முக்கியம்

இதனை தொடர்ந்து என்னதான் செயலிகள், மின்னனு சாதனங்கள் வந்தாலும் மக்களின் அத்தியவசிய தேவையான உணவை அடித்து கொள்ள முடியாது என நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.