புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில் மாநில எல்லைகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக புதுச்சேரி எல்லைப் பகுதிகளான காலாப்பட்டு, கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை பகுதிகளில் துணை இராணுவத்தினருடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்கள், மினி டெம்போக்கள் உள்ளிட்ட வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சோதனையில் துணை ராணுவத்தினர், கலால்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.