போலி சான்றிதழுடன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்ய வந்த தெலங்கானா பெண் கைது!

போலி சான்றிதழுடன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் பதிவு செய்ய வந்த தெலங்கானா பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவாளராக…

போலி சான்றிதழுடன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் பதிவு செய்ய வந்த தெலங்கானா பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவாளராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் காமராஜர்.  இந்த அலுவலகத்திற்கு பெண் ஒருவர் மருத்துவ படிப்பு முடித்த சான்றிதழ்களை பதிவு செய்ய வந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : ரோஹித் சர்மாதான் கேப்டன் – ஜெய் ஷா உறுதி!

இதையடுத்து, பதிவாளர் டாக்டர் காமராஜர் அந்த சான்றிதழ்களை ஆய்வு செய்த போது போலி ஆவணங்கள் என தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ஆயிஷா தன்வீர் (50) என்பது தெரிய வந்தது. இந்த பெண் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.