இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் கிரிக்கெட் : ராஜ்கோட்டில் இன்று தொடக்கம்!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.   இந்த…

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் இன்று தொடங்க உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.   இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.  அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.  அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி பிப்.10 அன்று அறிவிக்கப்பட்டது.   அதன்படி, இந்திய வீரர்களின் பட்டியல் பின்வருமாறு..

  • ரோஹித் சர்மா (கேப்டன்)
  • ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • சுப்மன் கில்
  • கே.எல். ராகுல்
  • ரஜத் படிதார்
  • சர்பராஸ் கான்
  • துருவ் ஜூரல்
  • கே.எஸ். பாரத்
  • ஆர். அஷ்வின்
  • ரவீந்திர ஜடேஜா
  • அக்சர் படேல்
  • வாஷிங்டன் சுந்தர்
  • குல்தீப் யாதவ்
  • முகமது சிராஜ்
  • முகேஷ் குமார்
  • ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பங்கேற்காதது இந்திய அணிப்பு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆட்டம் நடைபெறும் ராஜ்கோட் மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் இல்லாத நிலையில், சர்ஃப்ராஸ் கான் அவரிடத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது.  அதேபோல ரஜத் பட்டிதாரும் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.