நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’
என்ற பிரபாகத் தமிழனின்
போராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…
ஓ
சர்வதேச சமூகமே !
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு
என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை மனதில் வைத்து, கோபங்களை கவிதையாய கொட்டியுள்ளார். இது துவண்டு கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் வரிகளாய் காதில் விழுகிறது.
இதுதொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு விதமான பதில் கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். குளித்தலை மனோ என்பவர் கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம், இலங்கையிலோ கண்ணீரும், உதிரமும் எரிக்கிறது என ராஜபக்சேவிற்கு எதிராக கருத்து கூறியுள்ளார்.
எசப்பாட்டு என்பவர் ஈழமக்களின் வலிகளை வரிகளாக வடித்துள்ளார். அவை,
சலங்கை கட்டி ஆடுகிறது
இங்கு வன்முறை
இலங்கை எரிவது இது
இரண்டாம் முறை.
முதல்முறை எரிந்தது
மன்னன் மோகம் கொண்ட
மாற்றான் தாரத்தால்.
இன்றெரிவது
மன்னன் காக்கத்தவறிய
பொருளாதாரத்தால்.
அன்று
தமிழ் நாக்கள் இட்ட சாபம்.
இன்று
மன்னனுக்கு பதுங்கவும் இடமில்லை, பாவம்!
இப்படி இலங்கையில் ஈழத்து தமிழ் மக்கள் படும் துன்பத்திற்கு காரணமான ராஜபக்சேவிற்கு எதிரான கருத்துக்களை வரிந்து கட்டிக்கொண்டு எழுதி வருகின்றனர் நெட்டிசன்கள்.
Advertisement: