அசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து…

அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்று 11.30 மணியளவில் ஆந்திரப்பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தெற்கு, தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கில் நகர்ந்து ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிக்கு இன்று வந்துசேரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. பின்னர், இது திசைமாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை புயலாகவும், நாளை தீவிர காற்றழுத்தமாகவும் வலுகுறையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், நாளைமுதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.