யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல், மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலானது.

ஒடிசா- மேற்கு வங்கம் இடையே பாலசோர் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்த யாஸ், காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலை தொடர்ந்து ஏற்பட்ட மழை காரணமாகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், பிரதமர் மோடி புயல் மற்றும் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ஒடிசாவுக்கு இன்று காலை சென்றார். புயல் பாதிப்பு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் புயல் பாதித்த பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தார். மேற்குவங்க மாநிலத்திலும் யாஸ் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.