முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, சிறப்பு அதிகாரியை நியமித்து ஒற்றை சாளர முறையில் விரைவுபடுத்தக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பணிகளை விரைவுபடுத்த நிர்வாக அதிகாரி அல்லது சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். கட்டுமான செலவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் ராஜன் செல்லப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்!

Ezhilarasan

ஏடிஎம் கொள்ளை முயற்சி: பாடி ஸ்ப்ரே உடன் வந்த டவுசர் கொள்ளையன்

Halley Karthik

தமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு

Halley Karthik