நடைபெற உள்ள டி20 உலகக்க்கோப்பையை இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 4 அணிகளில் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது கொரோனா பரவல் வேகம் இந்தியாவில் அதிகரித்து வருவதால் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு 4 அணிகளுக்கு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் நடைபெற உள்ள 20 ஓவர் டி 20 போட்டியை வெல்ல இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அந்த அணியினர் எப்போதுமே 20 ஓவர் போட்டியை மிக அற்புதமாக விளையாடி வருகின்றனர். அதேபோல், இங்கிலாந்து அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேற்கிந்திய தீவுகள் அணி பற்றி நாம் இப்போது கணிக்க முடியாது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் போட்டியில் பங்கேற்றால் அவர்கள் மற்ற அணிக்கு அச்சுறுத்தலாக விளங்குவார்கள் என்று தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையையின் இறுதி போட்டியை இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரராக இந்த ஆண்டு கோப்பையை எங்களது அணி வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக அணி கடுமையாக உழைக்க வேண்டும். அணியை பொருத்தவரை 5 மற்றும் 6ம் இடங்களில் விளையாடும் வீரர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும் அப்படி சரியான 11 பேர் கொண்ட சரியான அணி தேர்வு செய்து விட்டால் டி 20 கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என தெரிவித்தார்.







