கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வருகிற 16ம் தேதி முதல், நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் உள்பட அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மாநில முதல்வர்களிடம் கேட்டறியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







