முக்கியச் செய்திகள் இந்தியா

ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் சூறையாடினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களுடன், மத்திய அரசு 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, ஹரியானாவில் வேளாண் சட்டங்களின் நன்மையை விளக்கிகூறும் வகையில், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கிசான் மகா பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இதற்காக, கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில் அமைக்கப்பட்ட மேடையை விவசாயிகள் சூறையாடினர். நாற்காலிகள், மேஜைகளை உடைத்து எறிந்த அவர்கள், வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து முதலமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Jeba Arul Robinson

உலக தலைவர்களாக வலம் வரும் இந்திய வம்சாவளியினர்

Web Editor

டிக்கெட் எடுக்காமல் பயணம் – காவலருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம்: வீடியோ வைரல்

Web Editor

Leave a Reply