10 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு தயார்!

இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி போடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி போடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். அரசு அனுமதி அளிக்குமானால், கொரோனா தடுப்பூசி போடும் பணி, வரும் 13ம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட நாட்டின் 4 நகரங்களில், தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 37 இடங்களில் இருந்து தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கும் என்றும், ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply