சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஜன.19ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி

மகர விளக்கு விழா முடிந்த பின்பும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 19ஆம் தேதி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம்…

மகர விளக்கு விழா முடிந்த பின்பும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 19ஆம் தேதி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனைக் காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

சபரிமலையில் மகரவிளக்கு விழாவிற்கு பிறகும் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை
தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை சுமார் 46,000 பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வந்தடைந்ததாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் வரும் 19 ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் 20 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் கோயில் நடை மூடப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.